விளம்பரப் பொருள்

என்எச்எஸ் மலக்குடல் புற்றுநோய் ஆய்வுச் சோதனை: தீர்மானிப்பதற்கு உங்களுக்கு உதவுதல் (Tamil)

புதுப்பிக்கப்பட்டது 22 ஜூலை 2024

Applies to England

மலக்குடல் புற்றுநோய் ஆய்வுச் சோதனையில் பங்குகொள்கிறீர்களா என நீங்கள் தீர்மானிக்கலாம். நீங்கள் தீர்மானிக்க உங்களுக்கு உதவும் நோக்கத்தைக் கொண்டது இந்தத் துண்டுப்பிரசுரம்.

1. எதற்காக மலக்குடல் புற்றுநோய் ஆய்வுச் சோதனையை என்எச்எஸ் வழங்குகின்றது

நோய்க் குறிகள் இல்லாதபோது, ஒரு ஆரம்ப கட்டத்தில் மலக்குடல் புற்றுநோய் குறிகளை முயற்சித்து கண்டறிவதற்காக நாங்கள் ஆய்வுச் சோதனையை வழங்குகின்றோம். அப்போதுதான் சிகிச்சை அதிகளவில் பலனுள்ளதாக இருக்கலாம்.

சிலவேளைகளில் மலக்குடலில் உள்ள அணுக்கள் மிக விரைவில் வளர்ந்து, ஒரு மலக்குடல் சதைக் கட்டி எனப்படும் ஒரு கொத்தை உருவாக்குகின்றது. சதைக் கட்டிகள் புற்றுநோய்கள் அல்ல. ஆனால், காலப்போக்கில் அவை புற்றுநோய்களாக விரிவடையலாம். சதைக் கட்டிகளைக் கண்டுகொள்வதன் கருத்து அவை அகற்றப்படலாம் என்பதாகும்.

நீங்கள் குடல் புற்றுநோயைப் பெற்று இறக்கும் ஆபத்தை ஒழுங்கான ஆய்வுச் சோதனை குறைக்கின்றது.

2. மலக்குடல் புற்றுநோய் ஆய்வுச் சோதனைக்கு நாங்கள் யாரை அழைக்கிறோம்

54க்கும் 74க்கும் இடையிலான வயதுடையவர்களை 2 வருடங்களுக்கு ஒருமுறை மலக்குடல் புற்றுநோய் ஆய்வுச் சோதனைக்காக அழைக்கிறோம். வீட்டில் செய்வதற்கான ஒரு குடல் புற்றுநோய் ஆய்வுச் சோதனை கருவித் தொகுப்பை நாங்கள் அனுப்புகின்றோம். இந்த நிகழ்ச்சித்திட்டம் படிப்படியாக 50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தகுதியுள்ள மக்களுக்குக் கிடைப்பதற்காக விரிவடைகின்றது.

அழைக்கப்படுவதற்கு, நீங்கள் உங்களை ஒரு குடும்ப மருத்துவருடன் பதிவுசெய்தவராக, இங்கிலாந்தில் வசிக்க வேண்டும். உங்கள் குடும்ப மருத்துவரின் சிகிச்சை இடம் உங்களின் தொடர்புக்கான தகவலை எங்களுக்குக் கொடுக்கிறார்கள். பின்வருவன உட்பட, அவர்களிடம் சரியான விபரங்கள் உள்ளன எனத் தயவுசெய்து பார்த்துக்கொள்ளவும்:

  • பெயர்
  • பிறந்த தேதி
  • முகவரி
  • தொலைபேசி எண்
  • மின் அஞ்சல் முகவரி.

நீங்கள் 75 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருந்தால், நீங்கள் இன்னும் 2 வருடங்களுக்கு ஒருமுறை மலக்குடல் புற்றுநோய் ஆய்வுச் சோதனையில் பங்குகொள்ளலாம், ஆனால் நீங்கள் அழைக்கப்படமாட்டீர்கள். 0800 707 60 60 இல் எங்களை இலவசமாக அழைக்கவும்.

3. மலக்குடல் புற்றுநோய்

மலக்குடல் உங்களின் சமிபாடு முறையின் ஒரு பகுதியாகும். அது உணவிலிருந்து சத்துப் பொருளையும் தண்ணீரையும் எடுத்து மலமாக விடுகின்றது. கீழுள்ள விளக்கப்படத்தில் இருப்பது போன்று, பெருங்குடலும் மலக்குடலும் சேர்ந்து பெரும் மலக்குடலாக அமைகிறது.

மலக்குடல் புற்றுநோய் என்பது பெரும் மலக்குடலின் எந்தப் பகுதியிலும் கண்டுகொள்ளப்படும் புற்றுநோயாகும். இது பெருங்குடலையும் மலக்குடலையும் உள்ளடக்குகின்றது.

பெருங்குடலும் மலக்குடலும் சேர்ந்து பெரும் மலக்குடலாக அமைகிறது. அவை சமிபாடு முறையின் ஒரு பகுதியாகும்.

4. மலக்குடல் புற்றுநோய் ஆய்வுச் சோதனை எவ்வாறு செயற்படுகின்றது

உங்களுக்கான அழைப்பு மலக்குடல் புற்றுநோய் ஆய்வுச் சோதனை பற்றிய தகவலை உங்களுக்கு வழங்கும்.

வீட்டில் பயன்படுத்த ஒரு சோதனை கருவித் தொகுப்பை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம். இது ஒரு மலத்தில் இரத்தம் இருத்தல் சோதனை (faecal immunochemical test - FIT) என அழைக்கப்படுகின்றது. ஒரு சிறிதளவிலான மலம் மாதிரியை எடுத்து ஒரு ஆய்வுகூடத்துக்கு அனுப்புவுதற்கு நீங்கள் இந்தக் கருவித் தொகுப்பைப் பயன்படுத்துகிறீர்கள். சிறிதளவிலான இரத்தம் எதுவும் உள்ளதா எனப் பார்ப்பதற்காக ஆய்வுகூடம் இந்த மலம் மாதிரியைச் சரிபார்க்கின்றது. இதற்கான காரணம் சிலவேளைகளில் தசைக் கட்டி மற்றும் மலக்குடல் புற்றுநோய் என்பவற்றிலிருந்து இரத்தம் கசிகிறது. இதற்குப் பின்னர், பெரும்பாலான மக்களுக்கு மேற்கொண்டு சோதனைகள் தேவைப்படாது.

உங்கள் மலம் மாதிரியில் இரத்தம் இருப்பதை நாங்கள் கண்டால், இந்த இரத்தத்துக்கான காரணம் என்ன எனக் கண்டறிய எங்களுக்கு உதவ, மேற்கொண்டு சோதனைகள் உங்களுக்குத் தேவைப்படலாம். ஒரு குடல் ஆய்வை (கொலொனொஸ்கோபி) செய்தல் குறித்து உங்களுடன் உரையாடுவதற்காக, உங்களுக்கு ஒரு நியமனத்தை வழங்குவோம். ஒரு குடல் ஆய்வு உங்கள் மலக்குடலின் உட்பகுதியைப் பார்க்கிறது.

5. வீட்டில் சோதனை கருவியைப் பயன்படுத்தல்

ஆய்வுச் சோதனையைச் செய்வதற்கு, இந்தக் கருவியைப் பயன்படுத்தி, உங்கள் மலத்தின் சிறிதளவை நீங்கள் சேகரிக்க வேண்டும். உங்கள் மலம் மாதிரியை எடுப்பதற்கு, தயவுசெய்து சுத்தமான, எறிந்துவிடக்கூடிய ஒரு கொள்கலத்தைப் பயன்படுத்தவும். அதன் பின்னர், சோதனைக்காக இந்த மாதிரியை தபாலில் அனுப்பவும். இந்தக் கருவி தொகுப்பில் முன்னராகவே பணம் செலுத்தப்பட்ட தபால் விபரமும் முழுமையான அறிவுறுத்தல்களும் உள்ளன.

உங்கள் மலம் மாதிரியை நாங்கள் சரிபார்த்துக்கொண்டதும், முடிவைப் பதிவுசெய்து, சோதனைக் கருவியையும் அதில் உள்ளவற்றையும் அழித்துவிடுகிறோம்.

உங்களிடம் ஏதாவது கேள்விகள் இருந்தால், 0800 707 60 60 இல் எங்களின் இலவச உதவிச் சேவையைத் தயவுசெய்து அழைக்கவும். இதில் அடங்குபவை உங்களுக்கு:

  • இந்தச் சோதனையைச் செய்வதில் உதவி தேவைப்பட்டால்
  • இதை நீங்கள் பயன்படுத்த வேண்டுமா என உங்களுக்குத் தெரியாவிட்டால், உதாரணமாக அறுவைச் சிகிச்சையை நீங்கள் பெற்றிருந்தால்
  • நீ்ங்கள் ஒரு வயிற்றுப் பை (கொலொஸ்ரொமி அல்லது இலிஒஸ்ரொமி வயிறு வழியாக மலம் அகற்றல்) வைத்திருந்து அறிவுரை தேவைப்பட்டால்.

உங்களுக்கு மாதவிடாய் இல்லாத காலத்தில் உங்கள் மாதிரியைச் சேகரித்தல் சிறந்ததாகும். மாதவிடாய்க்கு முன்னரான அல்லது பின்னரான 2 நாட்களைத் தவிர்க்கவும்.

இது வீட்டு சோதனை கருவி தொகுப்பின் ஒரு தோற்றமாகும். பயன்படுத்தல் தொடர்பான அறிவுறுத்தல்கள் இந்தத் தொகுப்பில் உள்ளன.

6. மலக்குடல் புற்றுநோய் ஆய்வுச் சோதனையின் முடிவுகள்

உங்கள் மலம் மாதிரியை நீங்கள் அனுப்பிய 2 வாரங்களுக்குள் நீங்கள் உங்கள் முடிவுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். 2 முடிவுகளுக்கான சாத்தியம் உள்ளது:

  • இந்த நேரத்தில் மேற்கொண்டு சோதனைகள் தேவைப்படவில்லை.
  • மேற்கொண்டு சோதனைகள் தேவைப்படுகின்றன.

6.1 இந்த நேரத்தில் மேற்கொண்டு சோதனைகள் தேவைப்படவில்லை

பெரும்பாலாான மக்கள் (100 இல் சுமார் 98) இந்த முடிவைப் பெறுகிறார்கள்.

இதன் கருத்து உங்கள் மலம் மாதிரியில் நாங்கள் இரத்தம் எதையும் காணவில்லை, அல்லது அது ஆய்வுச் சோதனை அளவைக் காட்டிலும் ஒரு சிறிதளவு மாத்திரமாகும்.

நீங்கள் 75 வயதுக்குக் கீழுள்ளவராக இருந்தால், 2 வருடங்களில் திரும்பவும் மலக்குடல் புற்றுநோய் ஆய்வுச் சோதனையை உங்களுக்கு வழங்குவோம்.

இந்தச் சோதனை முடிவு உங்களுக்கு மலக்குடல் புற்றுநோய் இல்லை என உத்தரவாதம் அளிக்கவில்லை. மலக்குடல் புற்றுநோய் வருங்காலத்தில் இன்னும் ஏற்படலாம். மலக்குடல் புற்றுநோய் குறிகள் உங்களுக்கு இருந்தால் அல்லது அவற்றைப் பெற்றால், ஒரு குடும்ப வைத்தியரைப் பார்க்கவும்.

6.2 மேற்கொண்டு சோதனைகள் தேவைப்படுகின்றன

100இல் சுமார் 2 பேர் இந்த முடிவைப் பெறுகிறார்கள்.

இதனுடைய கருத்து ஆய்வுச் சோதனை அளவைக் காட்டிலும் சிறிது அதிகளவிலான இரத்தத்தை உங்கள் மலத்தில் நாங்கள் கண்டுள்ளோம். இது ஒரு தலையீடு அளவு எனவும் அழைக்கப்படுகின்றது.

பல விடயங்கள் மலத்தில் இரத்தத்தை ஏற்படுத்தலா்ம். இரத்தத்துக்கான காரணத்தைச் சரிபார்த்துக்கொள்வதற்கு, ஒரு குடல் சோதனை முறை பற்றிக் கலந்துரையாட ஒரு நியமனத்தை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம்.

ஒரு குடல் சோதனை முறை (கொலொனொஸ்கோபி) உங்கள் மலக்குடலின் உட்பகுதி சோதனையாகும். கொலொனொஸ்கோபி பற்றி அதிகளவான தகவலை  NHS.UK இல் காணவும்.

7. மலக்குடல் புற்றுநோய் ஆய்வுச் சோதனையின் சாத்தியமான ஆபத்துக்கள்

எந்த ஆய்வுச் சோதனையும் 100% நம்பகரமானதல்ல.

மலக்குடல் புற்றுநோய் ஆய்வுச் சோதனை ஒரு சதைக் கட்டியை அல்லது புற்றுநோயைத் தவறவிடலாம். நீங்கள் வீட்டில் சோதனைக் கருவியைப் பயன்படுத்தியபோது, சதைக் கட்டியிலிருந்து அல்லது புற்றுநோயிலிருந்து இரத்தம் கசிந்திருக்காவிட்டால், இது நிகழக்கூடும்.  

பெரும்பாலான மக்களுக்கு மேற்கொண்டு சோதனைகள் தேவைப்படமாட்டாது. உங்களுக்குத் தேவைப்பட்டால், குடல் சோதனை முறையைப் பயன்படுத்துவதால் உங்கள் மலக்குடலைச் சேதப்படுத்தும் ஒரு சிறிய ஆபத்து இருக்கும். ஆனால் இது அரிதானது. ஒரு குடல் சோதனை முறை பற்றிக் கலந்துரையாடுவதற்கான ஒரு நியமனத்தில், நீங்கள் தீர்மானிக்க உங்களுக்கு உதவ அதிகளவு தகவலைப் பெற்றுக்கொள்வீர்கள்.

8. மலக்குடல் புற்றுநோய்க் குறிகள்

மலக்குடல் புற்றுநோய்க் குறிகளில் அடங்கக்கூடியவை:

  • உங்கள் மலத்தில் மாற்றங்கள், வழக்கமாக உங்களுக்கு இருக்காத இளகிய மலம், வயிற்றோட்டம் அல்லது மலச்சிக்கல் போன்றவை.
  • உங்களுக்கு வழக்கமாக இல்லாத முறையில் அதிகளவில் அல்லது குறைவாக அடிக்கடி மலம் கழித்தல்
  • உங்கள் மலத்தில் இரத்தம், அது சிவப்பாக அல்லது கறுப்பாகத் தோன்றலாம்
  • உங்கள் அடிப்பகுதியிலிருந்து இரத்த கசிவு
  • நீங்கள் இப்போதுதான் கழிவறைக்குச் சென்றிருந்தாலும், அடிக்கடி மலம் கழிப்பதற்கான தேவை உள்ளது போன்று உணருதல்
  • வயிற்றில் (அடிவயிற்றில்) வலி
  • உங்கள் வயிற்றில் (அடிவயிற்றில்) கட்டி
  • பருத்தல்
  • முயற்சிக்காமல் எடை இழத்தல்
  • மிகவும் களைப்பாக உணருதல், உதாரணமாக, வழமையான அளவைக் காட்டிலும், குறைந்தளவிலான சிவந்த இரத்த அணுக்கள் (அனீமியா) இருத்தல் காரணமாக.

இந்த நோய்க் குறிகள் இருத்தலின் கருத்து உங்களுக்கு மலக்குடல் புற்றுநோய் இருக்கின்றது என்பதாக இருக்க வேண்டியதில்லை. 3 வாரங்களுக்கு அல்லது அதற்கு மேலாக, இந்த நோய்க் குறிகளில் எதுவும் உங்களுக்கு இருந்தால், தயவுசெய்து உங்கள் குடும்ப வைத்தியருடன் பேசவும். அண்மையில் நீங்கள் மலக்குடல் புற்றுநோய் ஆய்வுச் சோதனையைப் பெற்றிருந்தாலும், இதைச் செய்வது முக்கியமானது.

9. மலக்குடல் புற்றுநோய் பெறுவதற்கு எவர் அதிகளவில் சாத்தியமானவர்

மலக்குடல் புற்றுநோய் பெறுவதற்கு நீங்கள் அதிகளவில் சாத்தியமாக இருக்கலாம், நீங்கள்:

  • 50 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால்
  • நீங்கள் புகைப்பவராக இருந்தால்
  • நீங்கள் அளவுக்கதிகமான எடை உள்ளவராக இருந்தால்
  • ஒரு நெருங்கிய உறவினர் மலக்குடல் புற்றுநோயைப் பெற்றிருந்தால்
  • உங்களுக்கு அழற்சியுள்ள மலக்குடல் வியாதி  இருந்தால். இதில் அடங்குபவை குரோன் நோய்  மற்றும் குடல் புண் வீக்கம்
  • மலக்குடல் தசை அழற்சி என அழைக்கப்படும் சிறிய கட்டிகள் உங்களுக்கு இருந்தால்
  • உங்களுக்கு மரபுரீதியான நோய்க்குறி அல்லது குடும்பம் சார்ந்த சுரப்பிக் கட்டிகள் இருந்தால்.

மலக்குடல் புற்றுநோய் ஆபத்தைக் குறைத்தல் பற்றிய அதிகளவிலான தகவலை,  NHS.UK இல் காணவும்.

10. அதிகளவிலான தகவலும் ஆதரவும்

மலக்குடல் புறுற்றுநோய் ஆய்வுச் சோதனை பற்றிய அறிவுரைக்கு, 0800 707 60 60 இல் எங்களின் உதவிச் சேவையை இலவசமாக அழைக்கவும்.  

கேட்டல் அல்லது பேச்சு கஷ்டங்கள் உங்களுக்கு இருந்தால், எங்களைத் தொடர்புகொள்வதற்கு நீங்கள் Relay UK சேவையைப் பயன்படுத்தலாம். உங்கள் டெக்ஸ்போண் மூலமாக 18001 என்பதை அழைத்து, பின்னர் 0800 707 60 60 இல் அழைக்கவும் அல்லது Relay UK app என்பதைப் பயன்படுத்தவும்.

ஈசி றீட்  மற்றும் ஏனைய மொழிகள் உட்பட,  இந்தத் தகவல் வேறு வடிவங்களில் கிடைக்கின்றது. ஒரு வேறு வடிவத்தை வேண்டிக்கொள்வதற்கு, நீங்கள் 0300 311 22 33 இல் அழைக்கலாம் அல்லது [email protected] இல் மின் அஞ்சல் அனுப்பலாம்.

நீங்கள் பின்வருவனவற்றையும் பயன்படுத்தலாம்:

சரியான நேரத்தில் ஆய்வுச் சோதனைக்கு உங்களை அழைப்பதற்கு, உங்கள் என்எச்எஸ் பதிவேடுகளிலிருந்து தனிப்பட்ட தகவலைப் பயன்படுத்துகின்றோம். ஆய்வுச் சோதனை நிகழ்ச்சித் திட்டங்களை மேம்படுத்துவதற்கும் தரமான பராமரிப்பை வழங்குவதற்கும் இந்தத் தகவல் எங்களுக்கு உதவுகின்றது. உங்கள் தகவலை எவ்வாறு பயன்படுத்துகின்றோம் மற்றும் பாதுகாக்கின்றோம் என அதிகளவில் வாசிக்கவும்.  

ஆய்வுச் சோதனையிலிருந்தும் எவ்வாறு விலகுதல் என்பதைக் கண்டுகொள்ளவும்.