குழும அறிக்கை

இலங்கை - மனித உரிமை முக்கியத்துவமான நாடு

புதுப்பிக்கப்பட்டது 8 பிப்ரவரி 2017

2015 to 2016 Cameron Conservative government-ன்கீழ் இது வெளியிடப்பட்டது

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின்

2015 இல் இலங்கையில் சில அக்கறைக்குரிய விடயங்கள் தொடர்ந்திருந்தபொழுதிலும் ஒட்டுமொத்த மனித உரிமைகள் நிலைமையில் ஒரு முன்னேற்றம் காணப்பட்டது. அண்மித்த ஆண்டுகளில் இருந்த கீழ்நோக்கிய போக்கை மாற்றிக்கொண்டு, இலங்கை அரசாங்கமானது பேச்சுச் சுதந்திரம், (ஊடகம் உட்பட) நடமாட்டச் சுதந்திரம் என்பவற்றை முன்னேற்றுவதற்கும், சனசமூகங்களுக்கிடையிலான பதற்றங்களைக் குறைப்பதற்கும், மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற நிறுவனங்களின் சுயாதீனத்தன்மையை நிலைநாட்டுவதற்கும் சாதகமான படிநிலைகளை எடுத்தது. கடந்த கால மனித உரிமை மீறல் துஸ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பான நீண்டகாலக் குற்றச்சாட்டுக்களை கவனத்தில் எடுப்பதற்கும், ஒக்ரோபரில் ஐநா மனித உரிமைகள் சபையில் தீர்மானத்தை இணை அனுசரணை செய்து மீளிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளின் பாதுகாப்பு என்பவற்றுக்கு தன்னை அர்ப்பணிப்பதற்கும் அதனது விருப்பத்தை அரசாங்கம் வெளிப்படுத்தியிருந்தது. அணுகுமுறையின் ஒரு சாதகமான மாற்றத்தில், சர்வதேச சமூகத்துடனும், மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் ஐநா அலுவலகத்துடனும் (ழுர்ஊர்சு) மற்றும் ஏனைய அமைப்புக்கள் உட்பட்டவற்றுடனும் அரசாங்கமானது உருப்படியான முறையில் ஈடுபட்டது.

2015 இல் ஐக்கிய இராச்சியம் ஆனது அரசாங்கத்தின் மறுசீரமைப்புச் செயன்முறையில் ஊக்குவிக்கவும் ஆதரவளிக்கவும் பணியாற்றியது. இராணுவத்தினர் குடியிருந்த காணிகளைத் திருப்பிக் கொடுத்தல், வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை அகற்றுதல், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இன்றி நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருப்போரை விடுவித்தல், போன்ற முக்கிய விடயங்கள் மீதான முன்னேற்றத்திற்காகவும், ஐக்கிய இராச்சியமானது இலங்கை மீதான மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் விசாரணைகளுக்கான ஒரு பலமான ஆதரித்து வாதிடுபவராகவும், ஐக்கிய இராச்சியம் இருந்ததுடன் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் சிபார்சுகள் பிரதிபலிக்க செய்யப்பட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானங்கள் கைக்கொள்ளப்படுவதற்கும் கருவியாக இருந்தது. உள்ளுர் கண்காணிப்பு முயற்சிகளுக்கும், ஆகஸ்டில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல்களின் அதிகரித்த பங்குபற்றுகைக்கும் ஆதரவளிக்கும், இலக்குவைக்கப்பட்ட நிதித்திட்டங்கள் ஊடாக இந்த அரசியல் முயற்சிக்கு நாம் ஆதரவளித்தோம். பொலிஸ் நியமங்கள் மற்றும் பொலிஸ் சனசமூக உறவுகளை

முன்னேற்றுவதற்கும் மற்றும் நாடுபூராகவும் மதங்களுக்கிடையிலான உரையாடல்களை ஊக்குவித்தும் நாம் பணியாற்றினோம். இந்த சாதகமான மாற்றங்களில் சில வடக்கு கிழக்கில் குறைவாகவே காணப்படுகின்றர். 2015 இல் மனித உரிமை பாதுகாவலர்கள், தொந்தரவு மற்றும் கடும் கண்காணிப்பு குறித்து தொடர்ந்து அறிக்கையிடுகின்றனர். கட்டாயப்படுத்தப்பட்ட மற்றும் தன்னார்வமற்ற காணாமற்போகைகள் ஐநா செயற்குழுவினர் நவம்பரில் தமது விஜயத்தின்பொழுது அவர்களால் எழுப்பப்பட்ட ஒரு விடயமாக உள்ளது. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் ஐநா அலுவலகத்தின் அறிக்கை கூட இன்னும் தொடர்ந்து உள்ள மனித உரிமை அக்கறைகள் பலவகை குறித்தும் சித்திரவதை தொடர்பான அறிக்கைகள் உட்பட மற்றும் பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் குறித்தும் அறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது. இவைகளையும் ஏனைய மனித உரிமை மீறுகை குற்றச்சாட்டுக்களையும் விசாரிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை ஐக்கிய இராச்சியம் தூண்டுவதுடன் இவ் விடயங்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்தும் முன்னே தள்ளும்.

2016 இல் இச் சாதகமான பாதை தொடர்வதற்கு நாம் எதிர்பார்க்கிறோம். இது இலங்கைக்கான சந்தர்ப்பத்தின் ஒரு கணமாக இருப்பதுடன் சர்வதேச சமூகமும் வகிபங்கு ஆற்றுவதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் ஐநா அலுவலகமானது அதன் சிபார்சுகள் அமுல்படுத்தல் மீதான முன்னேற்றம் தொடர்பான மதிப்பீட்டினை ஜுனில் 32வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வின்பொழுது சமர்ப்பிக்கும். மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கான தனது அர்ப்பணிப்புக்களை நிறைவேற்றுவதில் இலங்கையைத் தூண்டுவதற்கும் ஆதரவு அளிப்பதற்கும் மற்றும் பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவதற்கான அதன் முயற்சிகளில் பரந்துபட்ட ஆதவைக் கட்டியெழுப்புவதற்கு விரைவான முன்னேற்றத்தைச் செய்வதற்கும் நாம் தூண்டுதலையுமு; ஆதரவையும் வழங்குவதை நாம் தொடர்ந்து ஆற்றுவோம். மீளிணக்கம் மற்றும் மனித உரிமைகளுக்காக எமது ஆதரவைத் தொடருவதற்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 6.6 மில்லியன் பவுண்சுக்கு அதிகமானதை பிரதம மந்திரி வாக்குப்பண்ணியுள்ளார். ஜனநாயகத்தையும் சட்டம் ஒழுங்கையும் பலப்படுத்துதல், பாதுகாப்பு துறையினை மறுசீரமைத்தல், ஐக்கிய இராச்சியத்தின் அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ளல் என்பவற்றைத் தொடர்ந்து ஆற்றுவதையே இலங்கை அரசாங்கத்துடனான எமது பணியானது இலக்காகக் கொண்டிருக்கும்.