குழும அறிக்கை

மனித உரிமை௧ள் முக்கியத்துவ நாட்டுக்கான மேம்படுத்திய அறிக்கை – ஜனவரி முதல் ஜூன் 2016

புதுப்பிக்கப்பட்டது 8 பிப்ரவரி 2017

2015 to 2016 Cameron Conservative government-ன்கீழ் இது வெளியிடப்பட்டது

இலங்கையில் மனித உரிமைகளின் நிலைமையானது 2016 ஜனவரி மற்றும் ஜுனுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் முன்னேற்றம் தொடர்ந்துள்ளது. எவ்வாறாயினும் 2015 ஒக்டோபரில் ஐ.நா மனித உரிமைகள் சபையில் (HRC) 30/1 தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட அர்ப்பணிப்புக்களைப் பூர்த்தி செய்வதற்கு இலங்கை அதிகம் செய்ய வேண்டியுள்ளது. 2016 ஜுனில் மனித உரிமைகள் சபை அமர்வில் மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் (HCHR) தீர்மானம் 30/1க்கு எதிராக இலங்கையின் முன்னேற்றத்தின் தனது மதிப்பீட்டை வழங்கினார். இலங்கை அரசாங்கமானது தீர்மானத்தின் முக்கிய அர்ப்பணிப்புக்கள் சிலவற்றை அமுல்படுத்துவதற்கு எடுத்துக்கொண்ட படிநிலைகளால் மனித உரிகைள் சபையானது ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார். ஐ.நா மனித உரிமைகள் பொறிமுறைகள் உடனான அரசாங்கத்தின் சாதகமானதும் உற்பத்தி திறன் வாய்ந்ததுமான ஈடுபாடுகளை வரவேற்ற அவர், வரும் மாதங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மை சனசமூகங்களிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு மேலும் தொட்டுணரக்கூடிய ஏற்பாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். எங்களது கூற்றிலும் ஐக்கிய இராச்சியமானது HCHR இன் மதிப்பீட்டை வரவேற்றதுடன், முரண்பாட்டின் மரபை தீர்த்து வைப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தின் தொடருகையையும் வரவேற்றது.

கடந்த 6 மாதங்களாக சிவில் சமூகம் மற்றும் மனித உரிமை பாதுகாப்பாளர்கள் ஒரு முன்னேற்றகரமான சூழலைக் கண்டிருந்தனர். தகவல் அறியும் உரிமை சட்டமூலம் ஜுன் மாதத்தில் வெளியிடப்பட்டது. மிகவும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறும் அரசாங்கத்தை நோக்கிய ஒரு சாதகமான படிநிலையாக இருந்தது. வரலாற்று ரீதியானதாகவும் அதிகம் பேசப்பட்டதுமான கொலைவழக்குகள் மற்றும் காணாமற்போனோர்கள் விடயங்கள் பத்திரிகையாளர் பிரகீத் எகனிலகொட உட்பட முன்னேற்றம் கண்டிருந்தது, அதிகாரிகள் மற்றும் சில சக்திகளினால் செயன்முறைகள் குழப்பப்படுதல் என்ற அக்கறைகள் இருந்தபொழுதிலும் முன்னேற்றம் காணப்பட்டிருந்தது. 1996 இல் 26 சிவிலியன்களின் கொலைக்கான ஒரு வழக்கிற்கு விசாரணைக்காக 4 இராணுவசிப்பாய்கள் சென்றிருந்தனர்.

எல்லா ஆட்களையும் காணாமற்போகச் செய்வதிலிருந்து பாதுகாப்பதற்காக சர்வதேச சமவாயத்தை மே மாதத்தில் இலங்கை ஏற்று அங்கீகரித்தது. ஐக்கிய இராச்சியமும் ஏற்று வரவேற்றதுடன் இவைகள் திரும்ப நடவாதிருப்பதற்கான சட்டவாக்கத்தை அமுல்படுத்த அரசாங்கத்தைத் தூண்டியது. கடந்த மாதத்திலும் அரசாங்கமானது முரண்பாட்டின்பொழுது கிட்;டத்தட்ட 65,000 காணாமற்போன மக்களுக்கு ஆட்கள் இல்லாதிருக்கும் சான்றுப்பத்திரங்களை வழங்க அனுமதிக்கும் வரைபுச் சட்டத்தை அங்கீகரித்தது. குடும்பங்கள் மரபுவழியுரிமைகள், நட்டஈடு, சமூக நலனோம்பல் கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியங்களைச் சென்றடையும் இவ் நகர்வை ஐக்கிய இராச்சியம் வரவேற்றது. இந்த வருடத்தின் இறுதி அளவில் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றும் அரசாங்கத்தின் இலக்குடன், மார்ச் மாதத்தில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறை ஒன்று தொடங்கியது. முன்னேற்றகரமான மனித உரிமைகள் பாதுகாப்புகளை அறிமுகம் செய்வதற்கு இலங்கைக்கான ஒரு முக்கியமான சந்தர்ப்பத்தை இது பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. “சிங்கலே” போன்ற தேசியவாத பிரச்சாரங்கள் கடந்த அண்மித்த மாதங்களில் மதச் சிறுபான்மையினரையும், LGB&T குழுக்களையும் இலக்கு வைத்தனவாய் அவற்றில் ஒரு அதிகரிப்பு காணப்பட்டது. ஐக்கிய இராச்சியமும் அரசாங்கத்திடம் இது குறித்து அக்கறைகளை எழுப்பியதுடன் எல்லாவடிவங்களிலுமான பாரபட்சங்களை முடிவுக்கு கொண்டுவர அழைப்பு விடுத்து ஒரு கூற்றில் மே மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருந்தது. சித்திரவதை மற்றும் ஏனைய கொடூரங்கள், மனிதநேயமற்ற மற்றும் கீழ்த்தரமான நடத்துகைகள் மற்றும் அல்லது தண்டனைகள் மீதான ஐநாவின் விசேட தூதுவர் திரு. ஜுஆன் மென்டிஸ் ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்தார். திரு. மென்டிஸ் சித்திரவதை தொடர்பான குற்றச்சாட்டுக்களை எடுத்துக்காட்டியதுடன் முக்கிய நிறுவனங்களின் அனைத்துமடங்கிய மறுசீரமைப்பை சிபார்சு செய்தார். நாமும் அரசாங்கத்தை அவர்களது சிபார்சுகளின்படி செயற்படத் தூண்டியதுடன், நாட்டின் முக்கிய நிறுவனங்களின் கட்டமைப்பு மறுசீரமைப்பை உறுதிப்படுத்துவதற்காக ஏற்பாடுகளைக் கைக்கொள்ளுதல் உட்பட மற்றும் எல்லா சித்திரவதைச் செயற்பாடு மற்றும் பிழையான நடத்துகை குற்றச்சாட்டுகளையும் விசாரிக்குமாறு தூண்டினோம். மனித உரிமை மீறுகைகள் சித்திரவதை உட்பட பாரதூரமான இடர்களைக் குறைக்கும் இலக்குடனும், பொதுமக்களுக்கு சட்டம் ஒழுங்கில் நம்பிக்கையை முன்னேற்றும் இலக்குடனும், அதிக இயலுமையும், தொழில்வாண்மையும், பொறுப்புக்கூறலும் உடைய பொலிஸ்படையை விருத்தி செய்யும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறோம்.

ஜனவரியில் முரண்பாட்டில் பாலியல் வன்முறையை முடிவுக்கு வரும் அர்ப்பணிப்பின் பிரகடனத்தை இலங்கை உறுதி செய்திருந்தது. உயரளவிலான பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைக் கையாளுவதற்கு அரசாங்கத்தை நாம் ஊக்கப்படுத்தியதுடன், ஆவணப்படுத்தல், அரசாங்க செயற்பாடுகளை பரிந்துரைத்தல், கருத்திட்டத்திற்கு நாம் நிதியீட்டம் செய்திருந்தோம்.

சவால்கள் இன்னும் மிகுதியாக உள்ளன. குறிப்பாக வடக்கு கிழக்கில் அவைகள் உள்ளன. அரசாங்கமானது ஜனவரி மற்றும் ஜுனில் மேலும் காணிகளை விடுவிக்க அறிவித்திருந்தது. அத்துடன் சிலபகுதிகளில் பொதுமக்கள் வாழ்விலிருந்து இராணுவம் தனிமைப்பட்டிருக்க ஆரம்பித்துள்ளதாக சில அடையாளங்கள் உள்ளன. காணிகள் விடுவிக்கப்படுவதற்கும் வடக்கு கிழக்கில் இராணுவம் நீக்குதல் துரிதப்படுத்தப்படுவதற்கும் ஐக்கிய இராச்சியம் தொடர்ச்சியாக அழைப்பு விடுத்து வந்துள்ளது. HCHR ஆலும் சித்திரவதை தொடர்பான விசேட தூதுவராலும் எடுத்துக்காட்டப்பட்டவாறாக அரசசார்பற்ற நிறுவனங்களும், ஊடகங்களும், பாதுகாப்பு படைகளின் அவர்கள் மீதான கண்காணிப்பு அச்சுறுத்தல் மற்றும் தொந்தரவுகளாகியன, முன்னைய அரசாங்கத்தின் கீழ் இருந்ததைக் காட்டிலும் குறைவான அளவில் பாதுகாப்பு படைகளால் ஏற்படுத்தப்படும் சம்பவங்களை தொடர்ந்து அறிக்கையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தினை (PTA) இல்லாதொழிக்கும்படியும் அதற்குப் பதிலாக சர்வதேச நியமங்களை பூர்த்தி செய்யும், ஏதேச்சாதிகாரமான கைதுக்கு எதிரான பாதுகாப்புக்கள் உட்பட்ட, சித்திரவதை அல்லது கொடூரத்தன்மை, மனிதநேயமற்ற தன்மை மற்றும் தரம்கெட்ட நடத்துகை என்பன மீதான முற்றுமுழுதான தனிநபர் தடைகள் உட்பட, சட்ட சபையை சென்றடைவதற்கான ஏற்பாடுகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றைப் பூர்த்தி செய்யும் சட்டவாக்கத்துடன் இதற்குப் பிரதியீடு செய்யுமாறு ஐக்கிய இராச்சியம் இலங்கையை தொடர்ந்து தூண்டி வருகிறது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 250 தடுத்து வைத்திருக்கப்படுபவர்கள் இன்னும் அவ்வாறு வைத்திருக்கப்படுகிறார்களென நம்பப்படுகிறது. இவ்வழக்குகளைத் துரிதப்படுத்துவதற்கு அரசாங்கம் வாக்களித்திருந்தது. ஆனால் கடந்த ஆறு மாதங்களில் இதில் சிறிதான நகர்வே இடம்பெற்று இருந்தது. யாழ்ப்பாணத்தில் ஒரு தாக்குதல் ஆடை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் 25 க்கு மேற்பட்ட புதிய கைதுகள் இடம்பெற்று இருப்பதாகவும், சில கைதுகளானவை சட்ட செயன்முறைகளின் பிரகாரம் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டுகளுடன் அறிக்கைகள் உள்ளன. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சிபார்சுகளை அடிப்படையாகக் கொண்டு பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழான கைதுகளை மேற்கொள்வது தொடர்பாக எல்லாப் பாதுகாப்பு படைகளுக்கும் ஜனாதிபதி வழிகாட்டுதல்களை சுற்றுச் செய்திருக்கிறார்.

அப்போதைய ஆசியாவிற்கான FCO அமைச்சர் Hugo Swire ஜனவரியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அவரது மூன்று நாள் விஜயத்த்pன்போது திரு சுவைர் பிரதம மந்திரி ரணில் விக்கிரசிங்கவையும், வெளிநாட்டு அமைச்சர் மங்களசமரவீரவையும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனையும், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் சுமந்திரனையும் சந்தித்தார். திரு சுவைர் சிவில் யுத்தம் முடியப்பெற்றதிலிருந்து இலங்கை அரசாங்கத்தின் மீளிணக்கத்திற்கும், ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்குமான அர்ப்பணிப்புகளையும்; முன்னேற்றங்களையும் வரவேற்றதுடன், எல்லா இலங்கையர்களுக்கும் முடிவில்லாத நீடித்த அமைதியை வழங்குவதற்கு ஒன்றாகப் பணியாற்றுவதற்கு எல்லாத் தரப்பினரையும தூண்டினார். அவர் வடக்கிற்கு விஜயத்தை மேற்கொண்டதுடன் ஐக்கிய இராச்சியத்தால் நிதியீட்டப்பட்ட கண்ணிவெடி அகற்றலானது சனசமூகங்கள் எவ்வாறு தமது காணிகளுக்கு திரும்பிவருவதற்கு உதவுகின்றன என கண்டுகொண்டதுடன், மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களால் எதிர்கொள்ளப்படும் தொடரும் சவால்களையும் கேட்டு அறிந்துகொண்டார். வதியாத ஐக்கிய இராச்சியப் பாதுகாப்பு ஆலோசகரின் அண்மித்த நியமனத்தை அவர் வரவேற்றார். இலங்கையின் நீண்ட முரண்பாட்டின் மரபுகளைத் தீர்த்துக்கொள்வதிலும், நல்லிணக்கம் மீதான மனித உரிமைகள் உட்பட அதன் அர்ப்பணிப்புக்களை பூர்த்தி செய்து கொள்வதற்கும் இராணுவத்திற்கு முக்கிய வகிபங்கு உள்ளது. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஐக்கிய இராச்சியம் இராணுவத்திற்கு தந்திரோபாய தலைமைத்துவப் பயிற்சியை வழங்குவதற்கும், சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமைகளைப் புரிந்துகொள்ளுதல் அவற்றுடன் ஒட்டியொழுதல் உட்பட்டவற்றிலும் பயிற்சிகளை வழங்குவதற்கு ஆரம்பித்து இருந்தது.

2016 இன் மிகுதிக் காலப்பகுதியில் ஒரு சாதகபோக்கு தொடருவதற்கும் அக்கறைக்குரிய விடயங்களைத் தீர்த்து வைப்பதற்கும் அரசாங்கம் படிநிலைகளை எடுப்பதற்கும் நாம் எதிர்பார்க்கிறோம். இலங்கை அரசாங்கமானது மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை முன்னேற்றுவதற்கான அதன் அர்ப்பணிப்புக்களை பூர்த்தி செய்வதிலும் கடந்த காலத்தின் விடயங்களைத் தீர்த்து வைப்பதிலும் அதனை ஊக்குவித்து ஆதரவளிப்பதை ஐக்கிய இராச்சியம் தொடர்ந்து ஆற்றும். மனித உரிமைகளை முன்னேற்றுதல் சித்திரவதையைத் தடைசெய்தல் உட்பட, பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருதல், நிலைமாற்ற நீதி மற்றும் மதங்களுக்கிடையிலான வேலை போன்ற எமது கருத்திட்ட வேலைகளுக்கு நாம் தொடர்ந்து நிதியீட்டம் செய்வோம்.